தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைத் தோற்கடிக்க இலங்கை உலக நாடுகளின் ஆதரவு கோரியுள்ளது.

காணொளி மாநாட்டின் மூலம் நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மூன்று தசாப்தங்களாக அனுபவித்த நிலையில், உள்நாட்டில் மற்றும் சர்வதேசத்தின் அனைத்து பயங்கரவாத செயல்களையும் இலங்கை மிகக் கடுமையான வகையில் கண்டிக்கிறது என்று குறிப்பிட்டார்

இலங்கை மண்ணிலிருந்து பயங்கரவாதம் அகற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த பயங்கரவாத அமைப்பின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறது.

அந்த இயக்கம் தமது சித்தாந்தத்தை தொடர்ந்தும் பேணி வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற பொய்களையும் பிரசாரங்களையும் பரப்பி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.

பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு குறுகிய உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் இருந்தபோதிலும், உலகளாவிய சமூகம் இலங்கைக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

உலகிற்கு தற்கொலை குண்டுவெடிப்பை அறிமுகப்படுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தம் இன்று உலகம்; முழுவதும் வன்முறை தீவிரவாத செயல்களுக்கு முன்னுதாரணங்களை அமைத்துள்ளது.

யுத்தத்தின் கசப்பைக் கண்ட ஒரு தேசமான இலங்கை உலகம் முழுவதும் அமைதியை வளர்ப்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் முழுமையாக ஈடுபடுவதாகவும் ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here