விருந்துபசாரங்கள் நிகழ்வுகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள், அறிவுரைகள் (போதனை), கண்காட்சி, மக்கள் ஒன்று கூடல்கள், வருடாந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், பேரணி, மற்றும் பெரஹெர ஆகியனவற்றை நாட்டில் எந்தவொரு பகுதியிலும் மறு அறிவித்தல் வரை நடத்த வேண்டாம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் விசேட வைத்தியர் எஸ் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போது நிலவியுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் கொரோனா பரவை கட்டுபடுத்த ஒத்துழைப்பது மக்களின் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.