மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன்  நியமனம் பெற்றுள்ளார்.

இன்று பிற்பகல் அவருக்கான அமைச்சரவை நியமனக் கடிதத்தினை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

தற்போதைய அரச அதிபராக கடமையாற்றும் திருமதி.கலாமதி பத்மராஜா பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கும் புதிய அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here