வயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என்பதை அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னலால் என்பவர்,\

6வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வயிற்றை கிழித்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கூரான ஆயுதத்தால் கிழித்ததில் 35 வயதான அவரது மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

ஆனால் துரிதமாக செயல்பட்ட கர்ப்பிணியின் குடும்பத்தினர் அவரை விரைவாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கணவனின் தாக்குதலுக்கு இலக்கான அந்த பெண் 7 மாத கர்ப்பிணி என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here