கிழக்கு மாகாணத்தில் குட்டி ஜனாதிபதியாக மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் செயற்படுவதுவேதனைக்குரிய விடயம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்ட களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார் அதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டு பத்து மாதங்கள் தான் ஆகின்றது. அதற்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றத்தை நான் கலாமதி பத்மராஜாவின் இடமாற்றமாக பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமாகவே பார்க்கின்றேன்.

இடமாற்றம் தொடர்பில் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும், மண் தொடர்பான அனுமதி தொடர்பான பிரச்சினை, மயிலித்தே மடு தொடர்பான பிரச்சினை, அரசுக்கு ஆதரவான சிலரை இடமாற்றிய செயற்பாடுகள் தொடர்பாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன்.

மயிலித்தே மடு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் குட்டி ஜனாதிபதியாக இருந்து தன்னுடைய வேலைத்திட்டத்தை திணிப்பதாக உள்ளது.

எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி சரியான முறையில் செயற்படுகின்றவரே ஆளுநராக இருக்க வேண்டும். மாறாக தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரி என நினைக்கின்றவர் பொருத்தமற்றவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here