கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி படை முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 17/10/2020 சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இராணுவச் சிப்பாய் பெண் ஒருவரைக் காதலித்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் இராணுவச் சிப்பாயுடன் தொடர்பை துண்டித்ததனால் குறித்த வீபரீதம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது

இரத்தினபுரியை சேர்ந்த சிப்பாய் இயக்கச்சி கெமுனு வோச் படைப் பிரிவில் கடைமை புரிந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here