பிரான்சில் மாணவர்களுக்கு முகமது நபி குறித்து பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி மக்ரோன் லெபனான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் தலைநகர் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்திரங்கள் குறித்து பாடம் எடுத்தாக கூறி நேற்று மாலை 5 மணி அளவில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபரை சுட்டுக்கொன்றனர். 

இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான்,  இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here