வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக காணப்படும் பாதசாரிக்கடவை அழிவடைந்துள்ளது வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் வைத்தியசாலை வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள பாதசாரிக்கடவையை சீரமைத்துத்தருமாறு வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பல்வேறு நோயாளர்கள் கிளினிக் தேவைகளுக்காகவும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்விைடுவதற்காகவும் தினமும் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு சென்று வருகின்றனர் . இதில் சிறுவர்கள் , கர்பிணித்தாய்மார்கள்,முதியவர்கள் என்று பல்வேறு தரப்பட்டவர்கள் தினமும் சென்று வருவதால் வீதியைக்கடந்து செல்வதற்கு அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது .

நீண்ட நாட்களாக பாதசாரிக்கடவை அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது . இதனால் வீதியிலுள்ள பாதசாரிக்கடவைகள் தெளிவின்றியும் காணப்படுகின்றது . இதனை சீரமைத்துத் தருமாறு பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டும் இன்று வரையிலும் சீரமைக்கப்படவில்லை.

எனவே வைத்தியசாலைக்கு முன்பாக காணப்படும் பாதசாரிக்கடவையை சீரமைத்துத்தருமாறு வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் .

கடந்த சில நாட்களாக நகர்ப்பகுதிகளில் காணப்படும் பாதசாரிக்கடவைகள் , வீதிக்குறியீடுகள் என்பனவும் வெள்ளை நிறத்தினால் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக்கடவை சீரமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here