புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் வவுனியா நோக்கி சென்ற பேரூந்தில் ஏறி பயணித்துள்ளார்.

குறித்த பேரூந்தில் இருந்து மாலை 4.30 மணியளவில் வவுனியா, தபாலகம் முன்பாக இறங்கியுள்ளார். அதன் குறித்த இளைஞன் தொடர்பான எந்த தகவலும் இல்லை. அவரை காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதுடன், வவுனியா பொலிசாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞனை கண்டவர்கள் 0762127738 அல்லது 0776629797 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் உறவினர்கள் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here