குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் இன்று காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை தெஹிவளையில் கைது செய்யப்பட்ட அவர் மாலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை கைது செய்ய முன்னர் 24 மணித்தியாலங்கள் அவரை கண்காணிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here