2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைக் குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதாவது 20 மைக்ரோன் இற்குக் குறைவான பொலித்தீன் உற்பத்தி தடை செய்தல், பொலித்தீன்களால் உணவு ஒற்றும் உற்பத்திகளைத் தடை செய்தல், பொலித்தீன் திறந்த நிலப்பரப்பில் எரியூட்டல் தடை செய்தல் போன்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன்களுக்குப் பதிலாக மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கையெடுத்துள்ளது.

பொலித்தீன், பிளாஸ்டிக் முகாமைத்துவம் தொடர்பான பங்குதார நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் உடன்பாடுகளுக்கமைய ஒருமுறை பயன்படுத்தி அகற்றும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி,

Poly Ethylene Terephthalate (PET) மற்றும் ; Poly Vinyl Chloride (PVC) பொதிகளில் இரசாயனப் பொருட்களோ கிருமிநாசினிகளைப் பொதியிடல் தடை, மாற்று வழிமுறையாக கண்ணாடி அல்லது வேறு மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொதிகளைப் பயன்படுத்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here