குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்குவதற்ககான கடிதம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 34818 பேர் தெரிவு செய்ய்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவர்களுக்கு 25 துறைகளின் கீழ் 6 மாதங்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

gotta

அதற்கான சான்றிதழ் பின்னர் வழங்கப்படவுள்ள நிலையில், பயிற்சி காலப்பகுதியில் அவர்களுக்கு 22500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட அனைவரும் அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்களில் தொழில் செய்யாத குடும்பங்களின் உறுப்பினர்களாகும்.

பயிற்சியின் பின்னர் குறித்த நபர்கள் அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்ட நிறுவனங்களில் வெற்றிடங்களுக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here