இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று  இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Chennai Super Kings  அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த Chennai Super Kings  அணி 5 விக்கெட்டுகளை இழந்து 125  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  Rajasthan Royals  அணி 17 தசம் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதேவேளை, இந்தப் போட்டியின் சிறந்த வீரராக  Rajasthan Royals அணிக்காக ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த Jos Buttler தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.