கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின் காரணமாகவே இவ்வாறு பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

பதியுதீனை  பாராளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென நேற்று முன்தினம்  ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் வலியுறுத்தியபோதும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனால் அவருக்கு அனுமதி வழங்க முடியாதென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட் டதாக சபாநாயகரினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே பாராளுமன்ற அதிகார மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பு மாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு அறிவிக்க நேற்று நடந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

எனினும் கொரோனா சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்துமாறு கூறிக்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை பாராளுமன்றத்துக்கு  அழைத்து வரவேண்டுமென  ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here