பஞ்சபூதங்கள் ஆன் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. இப்படி ஐந்தை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.

ஐந்திற்கும் இவ்வுலகிற்கும் அதிகமான சம்பந்தம் உண்டு. மற்றும் சிவபெருமான் புரியும் கரும தொழில் காரியங்கள் ஐந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எனவே, ஐந்து முக ருத்ராட்சத்தையே நமக்காக மிக மிக அதிகமாக படைக்கின்றார்.

ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.

ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

மேலும், பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது.

நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்.

எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும்.

நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

மேலும், ருத்ராட்சம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஆனந்தமும் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here