பிரபல இளம் நடிகரை பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது சினிமா வட்டாரங்களில் அதிகமாக உள்ளது.

தொப்பையும் தொந்தியும் ஆக இருந்த அந்த இளம் நடிகர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அநியாயத்துக்கு உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

இதனை பார்த்த தயாரிப்பாளர்கள் தற்போது அந்த நடிகரை வைத்து தான் படம் தயாரிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று கொண்டு இருக்கிறார்களாம்.

இது ஒருபுறமிருக்க அந்த நடிகருடன் ஆரம்ப காலகட்டங்களில் காதலில் இருந்த நடிகையும், பப்ளிமாஸ் நடிகை மீண்டும் அவருடன் காதலை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

அந்த வகையில் நீண்ட நாட்களாக அந்த நடிகருடன் பேசாமல் இருந்த நடிகைகள் தற்போது போட்டி போட்டுக் கொண்டு அவருக்கு மெசேஜ் அனுப்பி வருகிறார்களாம்.

அது மட்டும் இல்லாமல் இருவரும் எங்கேயாவது வெளியில் செல்வோம் எனவும் தொடர்ந்து அவரை நச்சரித்து வருகிறார்களாம்.

எலி அம்மணமாக போவதை அறிந்து கொண்ட அந்த நடிகர் தற்போதைக்கு கேரியரில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்துவிட்டாராம்.

அந்த நடிகர் அவர்களை ஒதுக்கியது கூட தெரியாமல் அந்த நடிகரை, நான் தான் உஷார் செய்வேன் என இரண்டு நடிகைகளும் அடித்துக் கொள்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here