தமிழகத்தில் பல பெண்களை ஏமாற்றிய இளைஞர் ஒருவர் இலங்கை தமிழ் பெண் ஒருவரையும் காதலித்து ஏமாற்றியுள்ள சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தின் சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் நர்மதா (20) என்ற இலங்கைப்பெண் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்ததுடன் கோயமுத்தூர் தனியார் நூல் ஆலையிலும் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது கல்லூரியில் நர்மதாவின் தோழி ஒருவர் போன் நம்பரை கொடுத்து இந்த நம்பரில் எனக்கு அடிக்கடி போன் வருகிறது நீ அவனிடம் பேசு என கூறியுள்ளார். அந்த நம்பரை நர்மதா தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு போன் செய்துள்ளார்.

அதன் பின்னர் அந்த நபரும் நர்மதாவும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே தங்கள் காதலை வளர்த்து வந்ததுடன் நர்மதாவை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என அடிக்கடி பேசி உள்ளார்.

இதனால் திருமணத்திற்காக அந்த கம்பெனியில் இருந்து வெளியேறுவதற்காக பெற்றோரிடம் இந்த கம்பெனியில் வேலை கடினமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதன் பின் நர்மதா வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடியபோது, நர்மதா போன் மூலம், நான் வேறு ஒருவரிடம் இருக்கிறேன், என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார்.

பெற்றோர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகள் எங்கிருக்கிறாள், யாருடன் இருக்கிறாள் என்ற விவரம் தெரியாமல் தவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நர்மதா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில், அதிர்ச்சி அடைந்த நர்மதாவின் பெற்றோர்கள் யார் எவர் என விசாரணை நடத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மீசைக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த மணிபாலன் மகன் கோகுல் என்பவர் நர்மதாவை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காதல் திருமணம் செய்து கொண்டு 5 மாதம் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு அவரை விரட்டி அடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் கோகுல் நர்மதாவுடன் மட்டுமின்றி பல பெண்களிடம் செல்போன் மூலம் காதல் லீலையில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த நிலையில், இது குறித்து நர்மதா கோகுலிடம் கேட்ட போது பதில் ஏதும் சொல்லாமல் அம்மா வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று ஓட்டம் பிடித்துள்ளார்.

அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து நர்மதா தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கோகுலை நர்மதா உடன் வாழ வருமாறு அவரது உறவினர்கள் அழைத்துள்ளனர்.

எனினும், கொரோனா அதிகமாக பரவி வருகிறது என்னால் இப்போது வர முடியாது பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நர்மதாவிற்கு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையை பார்க்க வரும் படி அழைத்தபோதும் அவர் கொரோனாவை காரணம் காட்டி வரவில்லை.

இதனையடுத்து நர்மதா கடந்த மாதம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார் விசாரிப்பதாக கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை கோகுல், வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் , பொலிசாரின் விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here