பாகிஸ்தானில் மூன்று திருமணங்கள் செய்து கொண்ட 20 வயது இளைஞன், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வரும் செய்தியொன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானின் சியல்கொட் பகுதியைச் சேர்ந்த அட்னான் என்ற இளைஞன் ஏற்கனவே மூவரைத் திருமணம் செய்துவிட்டு தனக்கு நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவெனின்ல் அவர் மட்டுமின்றி, அவருடைய 3 மனைவிகளும் கணவருக்காக இணைந்து பெண் தேடி வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தனது 16 வயதில் முதல் திருமணம் செய்ததுடன் அத்தோடு நின்றுவிடாமல் சுமார் மூன்று வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, கடந்த ஒரு வருடத்துக்குப் முன்னர் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ஷும்பல், ஷபானா, ஷாஹிதா ஆகிய மூன்று மனைவிகளின் பெயரும் S என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்ய விரும்புவதாக அட்னான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்று மனைவியரையும் கட்டிக்காப்பாத்த ஒரு மாதம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு திருமணம் நடைபெறும் போதும், தனது நிதிநிலை மேம்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மூன்று மனைவிகளும் தன்னுடன் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தான் அவர்களிடம் போதுமான கவனத்தை செலுத்தவில்லை என்பதே என சிரிப்புடன் கூறியுள்ளார்,

அத்துடன் தற்போதுள்ள 3 மனைவிகளும் தங்களது நேரங்களை பிரித்து தன்னை மாறி மாறி கவனித்து வருவதாகவும் உள்ளூர் ஊடகங்களுக்கு குறித்த இளைஞர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here