தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் மனைவி முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிச்செல்வம் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மகன் மாரிச்செல்வம் தனது பாட்டி வீட்டுக்கு தூங்க சென்று விட்டான்.

இதனால் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலையில் வேலை முடிந்து முத்துப்பாண்டி வீட்டுக்கு வந்த போது அங்கு முப்புடாதி இரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியின் நண்பர் கந்தபாண்டி மகன் பிரேம் (35) மற்றும் சுப்பிரமணியன் மகன் துர்க்கைமுத்து (20) முப்புடாதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

ஏற்கனவே முத்துப்பாண்டிக்கும், பிரேமுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் அங்கு வந்த முப்புடாதி, பிரேமை அவதூறாக பேசியுள்ளார்.

இந்த முன்விரோதம் காரணமாக முப்புடாதியை பிரேம் மற்றும் துர்க்கைமுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here