உத்தரப்பிரதேசத்தில் அண்மை காலமாக பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி உள்ளது.

குழந்தை பாக்கியத்துக்காக சிறுமியின் நுரையீரல் வெட்டி எடுக்கப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம்  கட்டம்பூர் பகுதியில் இருந்து தீபாவளி தினத்தன்று சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கான்பூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமியின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாகவும், அவரது நுரையீரலின் ஒருபகுதி உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

குழந்தை பாக்கியம் பெறுவதற்கான பூஜைகள் செய்ய  சிறுமியின் உடலிலிருந்து நுரையீரல் அகற்றியது தெரிய வந்தது.  அப்பகுதியைச் சேர்ந்த பரசுராம் தம்பதியினருக்கு 20 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் சூனியம் செய்ய சிறுமியின் நுரையீரலை அகற்றும் படி அவரது மருமகன் அங்குல் குரில், அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் வற்புறுத்தியுள்ளார்.

சிறுமியை கடத்திய இருவரும், மதுபோதையில் இருந்ததால் சிறுமியைக் கொலை செய்வதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பரசுராம் ,அவரது மனைவி, அங்குல் குரில், பீரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் நிதி உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here