வேடசந்தூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த வடமதுரை பகுதியை சேர்ந்தவர் பொன்னர். அதே பகுதியில் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் அந்த வாலிபர், ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை, அந்த வாலிபருக்கே ரகசியமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த கிராம சேவகி ஒருவர் வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் படி, சிறுமியை திருமணம் செய்து கொண்ட பொன்னரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெண்ணின் தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here