செங்கல்பட்டு அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே நேற்று முன்தினம் மர்ம நபர்களால் பாபு என்பவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மறைமலை நகர் காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த பரணி, சொரி கார்த்தி, அனிஷ், ஒட்ட கார்த்தி, சரத்குமார் ஆகிய ஐந்து பேர் சரணடைந்துள்ளனர்.

கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் நிலத்தகராறு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே பாபுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here