வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள நகையகத்தில் தங்க நகைகளை களவாடிய மூன்று நபர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நகையத்தில் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு வருகை தந்த நபர்கள் அதனை சூட்சுமமான முறையில் களவாடிச்சென்றுள்ளனர். இதனையடுத்து நகையக உரிமையாளரினால் கடந்த 16.11.2020அன்று வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

SONY DSC

நகையக உரிமையாளரின் முறைப்பாட்டினையடுத்து இதனை விசாரணை மேற்கொள்ள வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் ஆலோசனைக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொருப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகவன்ன வழிகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் பிரனித் திசாநாயக்க தலைமையிலான பொலிஸ் சார்ஐனாகளான திசாநாயக்க , நிசாந்த , சந்தன , ரஞ்சித் பெண் பொலிஸ் கொஸ்தாபர் மதுசானி ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

SONY DSC

விசாரணைகளின் பிரகாரம் களவாடப்பட்ட நகைகள் அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள நகை அடவு நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் அதனை மீட்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு குழுவினர் நகையினை களவாடிய நபர்களையும் தலாவ பகுதியில் வைத்து கைது செய்தனர்.

அம்பன்தொட பகுதியினை சேர்ந்த 45வயதுடைய தாய் மற்றும் அவரின் 30 வயதுடைய மகள் மற்றும் அபரன பகுதியினை நேர்ந்த மகளின் காதலான 18வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

SONY DSC

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் நாடு முழுவதும் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதுடன் கொள்ளையடிக்கும் நகைகளை வேறுபகுதியில் அடவு வைப்பதினை கடந்த பல மாதங்களான செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

SONY DSC

மீட்கப்பட்ட 4லட்சம் பெறுமதியான 3 காப்பினையும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

SONY DSC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here