வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுக்கும் அமைப்பான தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த காரியாலயம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் சிறுவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த தமிழ் விருட்சம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்ளை வழங்கி வைத்து ஏழைக்குடும்பங்கள் வாழ்வில் முன்னேற பல உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு தி.திரேஸ்குமார் , வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் திரு லால் விஜேரத்ன , இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகனேஸ்வரசர்மா , சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி , நகரசபை உபநகரபிதா குமாரசாமி ,

நகரசபை உறுப்பினர் ரி.கே ராஜலிங்கம் , நகரசபை செயலாளர் இ.தயாபரன் , தனியார் போக்குவரத்து சங்க தலைவர் இராஜேஸ்வரன் , முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் சி.ரவீந்திரன் , ஓய்வு பெற்ற அதிபர் க.சிவஞானம் , ஓய்வு பெற்ற கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன் ,ஓய்வு பெற்ற அரச. உத்தியோகத்தர் தி.மகேந்திரராஜா , திடீர் மரணவிசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் மற்றும் வர்த்தகர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here