அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான வார்னர் இளம் வயதில் ஆட்டத்தின் போது செய்த தவறை செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித தொடர்களில் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி, அவுஸ்திரேலியா சென்றுவிட்டது. பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதுவதால், இப்போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியா தொடர் என்றாலே ஸ்ட்லட்ஜிங் இருக்கும், அந்தளவிற்கு எதிரணியினரை ஸ்ட்லட்ஜிங் செய்து வெற்றிக்காக எது வேண்டும் என்றாலும் செய்வர்.

இதனால் இந்த தொடரிலும் நிச்சயமாக அவுஸ்திரேலியா அணியினர் ஸ்ட்லட்ஜிங்கில் ஈடுபடலாம் என்று கூறப்படும் நிலையில், துவக்க வீரரான வார்னர் நான் அந்த தப்பை செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எனக்கு சமீபத்தில் 34 வயது பிறந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் எனக்கு மீதமுள்ள நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் வாக்குவாதத்தின் மூலம் என்னை வம்புக்கு இழுத்தால் அதிலிருந்து நான் விலகிச் செல்லவே விரும்புவேன். இந்த தொடரில் நான் எப்போதும் ஸ்லெட்ஜிங் செய்யவே மாட்டேன்.

காலப்போக்கில் நான் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். என்னை சீண்டுபவர்களை எதிர்த்து நான் மீண்டும் வாக்குவாதம் செய்யாமல் எனது பதிலை பேட் மூலம் கொடுக்க முயற்சிப்பேன்.

ஏனெனில் போட்டியின் இடையே ஸ்லெட்ஜிங் செய்யும் பொழுது போட்டியில் கவனச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் இந்த தொடரில் இந்த தவறை மட்டும் நான் செய்யவே மாட்டேன்.

ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் நல்ல துவக்கம் கொடுப்பதுடன் மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை மெயின்டெயின் செய்து விளையாட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் எனது வழக்கமான ஆக்ரோஷத்தை குறைத்து சிறப்பாக விளையாடி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here