லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் இருவர் அறிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் எல்.பி.எல் போட்டித் தொடர் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பாக உள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்த உள்ளன.

இதில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் எனப்படும் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து கழகங்களும் கடினமாக, நேர்மையாக, திறமையுடன் மகிழ்ச்சியாக விளையாட வேண்டுமென சங்கக்கார கோரியுள்ளார்.

இந்தப் போட்டித் தொடர் சிறந்த போட்டித் தொடராக அமைய வேண்டுமென யாழ்ப்பாண அணிக்கு சங்கக்கார விசேட வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது நெருங்கிய நண்பரான குமார் சங்கக்காரவின் கூற்றை ஏற்றுக்கொள்வதாகவும் தாமும் புதிய கிரிக்கட் நகரமான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாகவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சங்கக்கார கண்டி பாடசாலையொன்றின் ஊடாகவும், மஹேல கொழும்பு பாடசாலையொன்றின் ஊடாகவும் கிரிக்கட்டிற்கு பிரவேசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here