வடக்கில் நாய்கள் ஊளையிடுகின்றது என தமிழர்களை கேலி கிண்டல் செய்த ஞானசார தேரரால் வடக்கை சேர்ந்த மக்கள் கோபமும் அதிர்ச்சியுமடைந்துள்ளனர்.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் உரிமைக்காக போராடி வந்த லட்சக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டனர்.
போராட்டம் முடிந்து சுமார் 11 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை.

தமிழ் அரசியல் தலைமைகளும் தீர்வை பெற்றுத்தரும் நிலையில் இல்லை. இந்த நிலையில் வழமை போல் இந்த வருடமும் மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் சகோதரனை, சகோதரியை, தந்தையை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மாவீரர் நாளே நிம்மதியான ஒன்றாக இருந்த நிலையில் அரசின் “மாவீரர் நாள் நினைவேந்தல்” தடை விடயத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு “பொது பலசேனா” கட்சியின் செயலாளர் ஞானசார தேரர் விமர்சனங்களை முன் வைத்ததுடன், தமிழ் மக்களை நாய் என்ற ரீதியில் அவர் கிண்டல் செய்துள்ளார்.
அத்துடன் மாவீரர் வாரத்தை அரசை எதிர்த்து ஆரம்பித்த சுமந்திரனை உடனடியாக கைது செய்யுங்கள் என்றும், சட்டத்தரணியான சுமந்திரன் சட்டத்தை மதிக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் மாவீரர் நாள் கொண்டாட்டம் என்பது நாட்டிற்கு செய்யும் துரோகம் என தெரிவித்ததுடன் வடக்கில் நாய்கள் கத்த ஆரம்பித்து விட்டதாகவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.
