கணவன்- மனைவி இருவரும் உடலளவிலும், மனதளவிலும் ஒன்றிணைந்து தனது எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஓர் நிகழ்வே தாம்பத்தியம்.

வெறுமனே உடலுறவு மட்டுமின்றி கணவன்- மனைவிக்கு இடையேயான அன்யோன்யம், சந்தோஷம் என வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு போவதில் தாம்பத்தியத்துக்கு முக்கிய இடமுண்டு.

ஆனால் இன்றோ பலரும் அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் தவறான புரிதலுடனும், தங்களுடைய ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமலும் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மிக முக்கியமாக உடலுறவுக்கு முன்னர், தங்களுடைய அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்வது மிக மிக அவசியம்.

ஏனெனில் இது பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்கிறது, அந்தரங்க உறுப்புகள் சுத்தமில்லாமல் இருக்கும் போது, கிருமித் தொற்று தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

மேலும் இது Sexually Transmitted Dieases-கள் போன்ற பால்வினை நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது, எனவே பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது மிகமிக அவசியமாகிறது.

இதுதவிர கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? இதனால் ஏதேனும் விபரீதம் நிகழுமா? போன்ற பல கேள்விகளும் தம்பதிகளுக்கு எழாமல் இல்லை.

அதிலும் IVF, Test Tube போன்ற சிகிச்சை முறைகளின் மூலம் குழந்தை வரத்தை பெற்றவர்களுக்கு இந்த சந்தேகம் பொதுவானது தான்.

கர்ப்ப காலங்களில் உடலுறவு என்பது ஒருவரது உடல்நிலையை பொறுத்தது, பெண்ணின் கருப்பை, கரு வளரும் விதம் என்பதை பொறுத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும்.

இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதிலை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.