நாம் தினமும் பயன்படுத்தும் பல பொருட்களின் வடிவமைப்பு, தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் நல்லது. மின்சார பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் 3 பின் பிளக்கில் ஏன் இந்த மூன்று பின்களில் ஒரு பின் மட்டும் நீளமாகவும் தடிமனாகவும் இருக்கிறதென்று பலருக்கும் தெரிந்திருந்தாலும் தெரியாத சிலருக்கு இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டி சொல்கிறேன்.

3 பின் பிளக்கில் நீளமாக இருக்கும் அந்த பின் தான் கிரௌண்டிங் (grounding) என்று சொல்லப்படக்கூடிய எர்த்திங் பாயிண்ட் (earthing point ). நாம் சுவிட்ச் அடாப்டரில் பிளக்கை செருகும் பொழுது இந்த தடிமனான நீளமான பின் தான் முதலாவதாக போர்டை தொடும். அதுபோல அடாப்டரில் இருந்து எடுக்கும் பொழுது கடைசியாக போர்டிலிருந்து விடுபடும்.

உலோகத்தினால் ஆன மின்சார கருவிகளில் முதலாவதாக கரண்ட் பாய்ந்து அசம்பாவிதமாக உங்கள் உடல் அதனோடு தொடர்பில் இருக்குமாயின் உங்கள் உடலை அது ஒரு கடத்தியாக பயன்படுத்தி உங்களின் வழியே பூமியை அடையும். இதனால் நீங்கள் மின்சாரத்தால் தாக்கப்படுவீர்கள். இப்படி மின்சார விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. அது சரி நீளம் மின்சார விபத்து ஏற்படாமல் இருக்க வைக்கப்படுகிறது.

ஆனால் அந்த தடிமன் எதற்க்காக என்ற சந்தேகம் வருகிறதா? சுவிட்ச் போர்டில் உள்ள அடாப்டர் பாய்ண்டில் தலைகீழாக அல்லது குறுக்குவாட்டில் இப்படி எதாவது கோணத்தில் பேஸ் (base) அல்லது நியூட்ரல் (neutral) ஓட்டைகளில் எர்த் பின் -ஐ விவரம் அறியாதவர்களோ அல்லது குழந்தைகளோ சொருகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பின்னை தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.