வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகரின் ஹோரவப்போத்தானை வீதி , மில் வீதி , பஜார் வீதி , சந்தை வீதி , கந்தசுவாமி ஆலய வீதி , சூசைப்பிள்ளையார் குள வீதி , முதலாம் மற்றும் இரண்டாம் குருக்குத்தெரு , பழைய பேரூந்து நிலையம் என்பன சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி வர்த்தக நிலையங்களை மீள திறந்து பொதுமக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு உரிய தீர்வினை வழங்கும் முகமாகவும் வர்த்தகர்கள் , ஊழியர்களின் வாழ்வதாரத்தினை கருத்தில் கொண்டு சுகாதார பிரிவினருடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர் இணைந்து பல்வேறு செயற்றிடங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் , வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வர்த்தக நிலையத்தின் பெயர் , வர்த்தக நிலையத்தின் விலாசம் , உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர் , விலாசம் , அடையாள இலக்கம் , தொலைபேசி இலக்கம் என்பவற்றினை 076 662 8386 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அல்லது வட்சப் , வைபர் செயளலி மூலம் அனுப்பி விரைவில் வவுனியா நகரை கொரேனா தொற்று அற்ற பகுதியாக மாற்ற உதவி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

varthaka sankam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here