வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் தனியார் மருந்தக நிலையம் ஒன்றினை நடாத்தி வருகின்ற ஏ9 வீதியில் தங்கியிருக்கும் வைத்தியர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அவரை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டிருந்த போதிலும் குறித்த வைத்தியர் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு செல்ல மறுத்து வந்துள்ளார்.

இந் நிலையில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மூன்று தினங்களின் பின்னர் இன்று (14.01) மதியம் கடுமையான முயற்சியினால் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சாதாரண பொதுமகனோருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்காத சமயத்தில் அவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் நீதிமன்றம் ஊடக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லுகின்ற போதிலும் குறித்த வைத்திருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மூன்று நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்வதற்கு தாமதித்தது ஏன்? அவர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு ஒர் சட்டமும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஒர் சட்டத்தினையும் அமுல்படுத்துவது கவலைக்குறிய விடயமாகும்

குறித்த வைத்தியரின் குடும்பத்தினர் தொடர்ந்து அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here