வவுனியா மாவட்டத்தில் தொடந்தும் வீதிகளை தனிமைப்படுத்தப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன. அத்துடன் பட்டானிச்சூர் பகுதி மற்றும் முதலாம் குறுக்குதெரு, இரண்டாம் குறுக்குத் தெரு உள்ளடங்கிய சில பகுதிகள் திங்கள்கிழமை காலை முதல் விடுவிக்கப்படுவதுடன் அப் பகுதிகளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் மாத்திரம் சுய தனிமைப்படுத்தப்படுவர்.

கொரோனா அச்சநிலை நீடிப்பதால் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதியின் றோயல் வரையிலான வீதி, மில் வீதி, கந்தசாமி கோவில் வீதி, பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நீடிக்கும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here