இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் பாரிய வெற்றி அளித்துள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பின் கடந்த மூன்று வார காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 42 கோடி ரூபாயை விடவும் அதிகம் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 9 விமானங்களில் உக்ரேன் சுற்றுலா பயணிகள் 1500க்கும் அதிகமானோர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.