வவுனியா- பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை பிசீஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கடந்த கடந்த 4 ஆம் திகதி கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா நகரிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய வர்த்தகர்களின் குடும்பங்கள் உட்பட பல குடும்பங்கள் பட்டானிச்சூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவின் புதிய கொத்தனியால் 222 பேராக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.