இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 30 புள்ளிகள் கிடைத்துள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4ஆம் இடத்தில் இருந்து 440 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதுவரை முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் நியூசிலாந்தும், 3வது இடத்தில் அவுஸ்திரேலியாவும் உள்ளன.