தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவேந்திர சஹால் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம் வீரர் சஹாலுக்கும், தனஸ்ரீ வர்மா என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பின்னர் கடந்த டிசம்பர் 22ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

தனஸ்ரீ பல மருத்துவர், நடன ஆசிரியை, யூ டியூபர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.

இந்த நிலையில் புதுமாப்பிள்ளையான சஹால், மனைவி தனஸ்ரீயுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், இருவரும் அழகான தம்பதிகள் என கருத்து பதிவிட்டுள்ளனர்.