இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்ததால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு முதலில் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில், 70.0 சதவீதப் புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்டதால், இன்னொரு அணி இங்கிலாந்தா? அல்லது இந்தியாவா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், . 3-1 என்ற கணக்கிலோ அல்லது 3-0, அல்லது 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வென்றால் இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்குச் சென்றுவிடும்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தாலோ அல்லது, 1-0 என்ற கணக்கிலோ, 2-1 என்ற கணக்கிலோ அல்லது 2-0 என்ற கணக்கிலோ முடிந்தாலோ அவுஸ்திரேலியா அணி இறுதிச் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.