இலங்கையில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்கின்றன என்று காவற்துறைபேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே காவற்துறை ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.

16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக பெண் பிள்ளைகள் பாடசாலை, மேலதிக வகுப்பு மற்றும் வெளிக்களச் செயற்பாடுகளுக்காகச் செல்லும்போது, பெற்றோர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் காவற்துறை பேச்சாளர் அறிவுறுத்தினார்.