‘டிக் டோக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விளம்பரப்படுத்தியமைக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பயங்கரவாதத்தையோ அல்லது தீவிரவாதத்தையோ ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ள காவல்த்துறையினர், அவ்வாறு ஊக்குவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.