சாவகச்சேரி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்தான்.

நெல்லியடியை சேர்ந்த ஜெ.அன்ரனி (வயது-20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதுடன் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த ச.சுதர்சன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதி ஏ9 வீதியில் இடம்பெற்றது.

சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.