இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முத்தரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்பில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்ற முடிந்த இருபதுக்கு : 20 தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது ஆன்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள்

மேற்கிந்தியத்தீவு அணியினர் 2016 முதல் 50 ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு முறை கூட வெல்லவில்லை.

ஜனவரி பிற்பகுதியில் பங்களாதேஷ் அணிக்கு எதரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் இழந்தனர்.

எனினும் அண்மையில் இலங்கைக்கு எதிரான டி-20 ஐ தொடரை வென்றதால் தற்சமயம் அவர்கள் அதிக நம்பிக்கையில் உள்ளன. 

இதற்கிடையில் தற்போதைய கீரோன் பொல்லார்ட் தலைமையிலான கரீபியன் அணி, எந்த அணிக்கு எதிராக போட்டியிட சிறந்த மற்றும் வலுவான ஒரு அணியாக மாறியுள்ளது.

இருந்தபோதும் இந்த ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். 

அதிரடி ஆட்டக்காரர்களாகவுள்ள அணியின் தொடக்க வீரர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது அணிக்கு மேலும் வலுச் சேர்க்கும். ஏனெனில் அவர்களின் வலுவான தொடக்கமானது அணிக்கு ஒரு பெரிய ஓட்டக் குவிப்புக்கு விதிடும்.

அதேநேரம் கரீபியன் பந்து வீச்சாளர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த இன்றைய தினம் வரிந்து கட்டுவர்.