வவுனியா பொலிசாரால் ஆலய உண்டியல் திருட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சிறுவர்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் நேற்று (11.03) அதிகாலை 1.30 மணியளவில் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர். ஆலயப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட சிசீரீவி வீடியோ காட்சிகளை சோதனையிட்ட பொலிசார் குறித்த சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

14 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிலரே குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளமை சிசீரீவி ஊடாக அறிய முடிவதாக தெரிவித்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.