பாடசாலைக்கு தேவையான பை ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து வாங்கச் சென்ற 15 வயது சிறுமி கடத்தப்பட்டு 8 நாட்கள் மொத்தம் 20 நபர்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் ராஜஸ்தானின் ஜலவர் பகுதியிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிப்ரவரி 25ம் திகதி தமது நண்பரும் இன்னொருவரும் சேர்ந்து பாடசாலை பை வாங்க கடைக்கு செல்லலாம் எனக் கூறி அழைத்து சென்றதாகவும்,

ஆனால் பின்னர் ஒரு பூங்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு, மூவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும்,

பின்னர் அந்த பூங்காவில் வைத்து வலுக்கட்டாயமாக போதை மருந்து அளிக்கப்பட்டு, அந்த மூவரால் வன்கொடுமைக்கு இலக்கானதாக அந்த 15 வயது சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட மொத்தம் 20 பேர் சுமார் 8 நாட்கள் தம்மை சீரழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நான்கு சிறுவர்கள் உட்பட 18 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி கடமையில் தவறியதாக கூறி இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பிறகும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாலையே, பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், எஞ்சிய குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்வோம் எனவும், உரிய தண்டனை கிடைக்க ஆவன செய்யப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.