இலங்கை மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 வீதமான மக்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதாக டிஜிட்டல் சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஜிப்ரி சுல்பர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றிற்கான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மக்கள் தொகையை விட அதிகமான எண்ணிக்கை, அதாவது 31 மில்லியன் கைடயக்க தொலைபேசி இணைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இணைய பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 வீதம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகையில் 92 சதவீத மக்களுக்கு இணைய பாதுகாப்பு உள்ளது, 7.9 மில்லியன் மக்கள் செயலில் உள்ள சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்,