கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கனேடிய அரசின் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பணம் மேயர் கைது செய்யப்பட்டமைக்கு தனது கடுமையான கண்டனத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தை சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்” எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.