வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டமையால் இருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பலத்த சேதத்திற்குள்ளானது.

நேற்றையதினம் இரவு வவுனியா மகாரம்பைக்குளத்தில் உள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இத்தாக்குதலில் இருவர் காயமடைந்ததுடன் வீட்டின் பொருட்களும் அடித்து உடைக்கப்பட்டதுடன் அந்த குழு தப்பிச் சென்றது.

தாக்குதல் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் கைவிட்டு சென்ற கத்தி ஒன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் மீட்டனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.