யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில், தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில், தகர கொட்டகை முகாம் ஒன்றினையும் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

முகக்கவசத்தை உரியமுறையில் அணியாதவர்களை எச்சரித்து, உரிய முறையில் அணியுமாறும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறும் மக்களை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக மக்களை பாதுகாக்கும் பொருட்டே இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.