தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (30) காலை அதிவேக நெடுஞ்சாலையில், கட்டுநாயக்கவிற்கு அண்மையில் வாகனம் விபத்திற்குள்ளானது.

விபத்தில் மீள பயன்படுத்த முடியாதளவில் வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளது. எனினும், தெய்வாதீனமாக வாகனத்தில் பயணித்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

பொத்துவில தொடக்கம பொலிகண்டி வரை பேரணி தொடர்பாக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறும் வழக்கில் முன்னிலையாக பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்தது.

மழை பெய்த்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானது.

பின்னர் மாற்று வாகனம் ஒன்றில கல்முனை நோக்கி சுமந்திரன் பயணத்தை ஆரம்பித்தார்.

எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் விபத்திற்குள்ளான பின்னர், பின்னால் வந்த வாகனமொன்றும் அதே இடத்தில் வழுக்கி விபத்திற்குள்ளானது.