வவுனியாஇ யாழ் வீதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து அதன் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று (30.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாஇ திருநாவற்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதி வழியாக நகரை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் ஒன்றில் வந்த நபர்கள் யாழ் வீதிஇ சோயா லேன் பகுதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து அதன் சாரதி மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் டிப்பர் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் மோட்டர் சைக்கிளின் கண்ணாடியும் உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வவுனியாஇ திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த பிரணவன் (வயது 30) என்பவரே படுகாயமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.