திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் பம்மதவாச்சி பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கவனயீனத்தால் இவ்விபத்து  சம்பவித்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.